Tuesday, November 12, 2013

Ekadashi Vrat Katha - Prabhodhini Ekadashi - ஏகாதசி விரத கதை ‍- ப்ரபோதினி ஏகாதசி

 
Lord Brahma tells the secrects of Haribodhini Ekadhasi to 
Naradha Muni

The Ekādhaśī that occurs during the light fortnight of the month Kārtika (October – November) is the Haribodhini Ekadhasi.
  • This sacred Ekādhaśī is more powerful in nullifying sin than one thousand Aśvamedha sacrifices and one hundred Rājasūya sacrifices.
  • The sins a person has accumulated over a thousand previous births are burned to ashes if he not only fasts but also remains awake throughout Ekādhaśī night, just as a mountain of cotton can be burned to ashes if one lights a small fire in it.
  • Even if one’s forefathers were implicated in many sins and are suffering in hell, they still attain beautifully ornamented spiritual bodies and happily go to Viṣṇu’s abode.
  • All places of pilgrimage in the three worlds at once come to reside in the house of a person who fasts on this Ekādhaśī.
  • One who fasts on this Haribodhinī day is acknowledged as a wise man, a true yogi, an ascetic, and one whose senses are truly under control.
  • The great soul who honors this Ekādhaśī by fasting and remaining awake throughout the night, the Supreme Lord, Śrī Vishnu, personally terminates the sinful reactions that soul has acquired by the actions of his mind, body, and words.
  • Anyone who bathes in a place of pilgrimage, gives charity, chants the holy names of the Supreme Lord, undergoes austerities, and performs sacrifices for God on Haribodhinī Ekādhaśī, the merit thus earned all becomes imperishable.
  • A person who observes this fast and worships Lord Viṣṇu properly is freed from great danger.
  • Fasting on this Ekādhaśī  is a thousand times better than giving charity on the day of the solar or lunar eclipse.
  • Whatever merit is earned by one who bathes in a place of pilgrimage, performs sacrifices, and studies the Vedas is only one tenth-millionth the merit earned by the person who fasts but one on Haribodhinī Ekādhaśī.
Courtesy : http://madhwasaints.wordpress.com 
 
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ப்ரபோதினி ஏகாதசி
(கார்த்திகை மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)

நவம்பர் மாதம் 13 ம் தேதி, புதன்கிழமை, கார்த்திகை மாதம், சுக்லப‌ட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ப்ரபோதினி ஏகாதசியாக‌ கொண்டாடுவர். ப்ரபோதினி ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.

தேவோத்தானி - ஹரிபோதினி - உத்தான ஏகாதசி என்னும் பெயர்களாலும் இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனிடம் - "ஹே அர்ஜூனா, நீ எனக்கு அதிபிரிய தோழனாவாய். ஹே பார்த்தா!, இப்பொழுது உனக்கு பாபங்களை அழிக்க வல்ல மற்றும் புண்ணியத்தையும், முக்தியையும் அளிக்கவல்ல ப்ரபோதினி ஏகாதசி விரத மஹிமையின் கதையையும் மற்றும் இது தொடர்பாக நாரதருக்கும், பிரம்மதேவருக்கும் இடையில் நடந்த சம்பாஷணையையும் உனக்கு கூறுகிறேன்.  சிரத்தையுடன் கேள். ஒரு முறை, நாரத ரிஷி பிரம்மதேவரிடம் ‍ " தந்தையே!! ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பதால் கிட்டும் பலனை பற்றி விஸ்தாரமாக உபதேசிக்க வேண்டும்" என்று வேண்டி நின்றார்.

பிரம்மதேவர் பதிலளிக்கையில் "மகனே !  கார்த்திகை மாதம் சுக்லபட்சத்தில் வரும் ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் பலனானது, ஆயிரம் அஸ்வமேத யாகம், நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் பலனிற்கு இணையானது ஆகும்"  என்றார்.

நாரதர் பிரம்ம தேவரிடம் - "தந்தையே, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருத்தல், இரவு மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டித்தல், நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் மேற்கொள்ளுதல் இவற்றினால் கிட்டும் பலன்களின் வித்தியாசத்தை பற்றி கூறுங்கள்" என்றார். 

பிரம்மதேவரும்,-" நாரதா!  ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பதால் இரண்டு ஜென்மாவின் பாபங்கள் நீங்குகிறது. நாள் முழுவதும் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் ஏழு ஜென்மங்களின் அனைத்து பாபங்களும் நீங்கப்பெறுகிறது. மூவுலகங்களிலும் கிடைக்கப்பெறாத பொருளும், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப்பெறும். ப்ரபோதினி ஏகாதசி விரதத்தின் பலனால் பாபங்களில் மிகவும் பெரிய பாபமும் க்ஷண நேரத்தில் நஷ்டமடைகிறது. பூர்வ ஜென்மத்தில் செய்த அநேக தீய வினைகளின் பாபங்கள் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தினால் க்ஷண நேரத்த்தில் நஷ்டமடைகின்றன. எவர் ஒருவர் தன்னுடைய ஸ்வபாவத்தினபடி ப்ரபோதினி ஏகாதசியை விதி பூர்வமாக விரதத்தை கடைபிடிக்கிறாரோ, அவருக்கு விரதத்தின் பூரண பலன் கிட்டுகிறது. 

எவர் ஒருவர் சிரத்தையுடன் இத்தினத்தில் சிறிதளவேனும் புண்ணியம் செய்தால், அது மலையளவிற்கு ஈடாகிறது. ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதாக சங்கல்பத்தை தன்னுடைய மனதில் நினைத்தாலே நூறு ஜென்ம பாபங்கள் அழிந்து விடுகின்றன. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதத்தை அனுஷ்டிப்பவரின் பத்து தலைமுறை மூதாதையர் மற்றும் எதிர்கால சந்ததியினர் விஷ்ணுலோகம் அடைந்து வாசம் செய்யும் பாக்கியத்தை பெறுகின்றனர். நரகத்தில் அனேக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவருடைய பித்ருக்களும் விடுதலை அடைந்து விஷ்ணு லோகம் அடைந்து சுக வாழ்வு பெறுவர். 

"ஹே, புத்ர !, பிரம்மஹத்தி போன்ற கொடிய பாபங்களும் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் நிவர்த்தி பெறுகிறது. அஸ்வமேத யாகம் போன்ற மகத்தான யாகங்கள் செய்வதால் கிட்டும் பலனை விட பன்மடங்கு பலன் ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கப் பெறுகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலன், சர்வ புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி பெறும் புண்ணியம், கோ (பசு) தானம், ஸ்வர்ண (தங்கம்) தானம், பூமி (நிலம்) தானம் ஆகியவற்றால் கிடைக்கப்பெறும் புண்ணியம் இவற்றிற்கு ஒப்பானதாகும். 

மேலும் நாரதா, " இவ்வுலகத்தில் எவர் ஒருவர் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்து தன்னுடைய குலத்தை பவித்ரமாக ஆக்குகிறாரோ, அவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் ஆவார். உலகத்தில் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதோ, மேலும் எத்தனை விதமான புண்ணிய தீர்த்தங்களை விரும்ப முடியுமோ, அத்தனையும் ப்ரபோதினி ஏகாதசி விரதம் கடைபிடிப்பவரது வீட்டிலேயே அமைந்து இருக்கிறது.

இறைவனின் திருஅருளைப் பெற கார்த்திகை மாதம், சுக்லபட்சத்தில் வரும் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் மற்ற அனைத்து செயல்களையும் துறந்து விதி பூர்வமாக அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எவர் ஒருவர் இவ்விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் தனவானாக‌, யோகியாக , தபஸ்வியாக‌ மற்றும் இந்திரனையும் வெற்றி கொள்ளும் வல்லமை பெற்றவராக ஆகிறார். ஏனெனில் ஏகாதசி திதியானது பகவான் விஷ்ணுவிற்கு மிகவும் ப்ரியமான நாளாகும். இவ்விரதத்தின் பலனாக, இதைக் கடைபிடிப்பவர் மறுபிறவி இல்லா நிலையை அடைகிறார்.

இவ்விரதம் மேற்கொள்வதால், உடல், சொல், மனம், இம்மூன்றினாலும் செய்த பாபங்கள் நஷ்டமடைகின்றன. இவ் ஏகாதசி நாளன்று பகவானின் அருள் வேண்டி எவர் ஒருவர் தானம், தவம், ஜபம், ஹோமம், யக்ஞம் ஆகியவற்றை செய்கிறாரோ, அவர் என்றும் குறையாத புண்ணிய பலனை பெறுகிறார்.

பால பருவம், யௌவன மற்றும் முதுமை என்று அனைத்து பருவத்தின் சர்வ பாபங்களும், ப்ரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பூஜை செய்வதால் நீங்குகிறது. ப்ரபோதினி ஏகாதசியன்று இரவில் கண்விழித்து விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனானது,  சூரிய கிரகணத்தின் போது ஸ்நானம் செய்வதால் கிட்டும் புண்ணியத்தை போன்று ஆயிரம் மடங்கு அதிகமானது. ஒருவர் பிறப்பிலிருந்து இது நாள் வரை செய்த புண்ணியங்கள், ப்ரபோதினி ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை இவற்றை சமன் செய்து நோக்குகையில், இது நாள் வரை அனுஷ்டித்த விரத பலன் ஒன்றுமில்லாமல் போகிறது எனலாம். அதாவது, வாழ்நாளில் ப்ரபோதினி ஏகாதசி விரதம் மேற்கொள்ளாதவரின் புண்ணியபலன்கள் வியர்த்தமாகிறது. 

அதனால் நாரதா, நீயும் விதிப்பூர்வத்துடன் பகவான் விஷ்ணுவிற்கு பூஜை செய்ய வேண்டும். கார்த்திகை மாதத்தில் எவர் ஒருவர் தர்ம சாஸ்திரங்களில் விதித்தபடி அன்று வெளியிடங்களில் அல்லாது இயன்றவரையில், தன் இல்லத்தில் உணவு உட்கொள்ளுவது மிகவும் சிறந்தது. இயலாது போனால், விஷ்ணு பக்தர்களில் எவரேனும் ஒருவர் இல்லத்தில் உட்கொள்ளுவது, அவருக்கு சந்த்ராயண விரதம் அனுஷ்டித்த பலன் கிட்டுகிறது.

கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் தான, தர்மங்களை விட, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ள விரத கதைகளை பக்தியுடன் ஸ்ரவணம் செய்வது பகவானுக்கு மிகுந்த ப்ரீதியை அளிக்கிறது. கார்த்திகை மாதம், பகவத் லீலா கதைகள் சிறிதளவேனும் பாராயணம் செய்வது அல்லது ஸ்ரவணம் செய்வது, நூறு கோ (பசு) தானம் செய்த புண்ணிய பலனுக்கு நிகரான பலனை அளிக்க வல்லது. 

அதைக் கேட்டு நாரதர் பதிலளிக்கையில், " மதிப்பிற்குரிய தந்தையே ! ஏகாதசி விரத பூஜா விதானம் (பூஜை முறை), விரதம் அனுஷ்டிப்பதின் முறைகள் மற்றும் அதன் வித வித புண்ணிய பலன்கள் அனைத்தையும் விவரமாக கூறுங்கள்" என்றார்.

பிரம்ம தேவர் அதைக் கேட்டு, " நாரதா!, ஏகாதசியன்று விடியற்காலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து, ஸ்நானம் இவற்றை முடித்துக்கொண்டு ஏகாதசி விரத சங்கல்பத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வேளையில் பகவானிடம் வினயத்துடன், " இறைவா, இன்று நாள் முழுவதும் அன்னம் உட்கொள்ளாமல் (உபவாசம் இருத்தல்) விரதம் அனுஷ்டித்து மறுநாள் துவாதசியன்று பூஜை முடித்து போஜனம் ஏற்பேன். அதுவரை என்னை காத்தருள வேண்டும். மேலும் விரதத்திற்கு எவ்வித பங்கமும் வராமல் இருக்க உன் திருவருளையும் வேண்டுகிறேன்". என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். 

பிரார்த்தனை முடிந்தவுடன் பூஜை, ஆராதனை செய்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அன்று இரவு பகவானின் முன்னிலையில் கண் விழித்து பாட்டு, நிருத்யம், வாத்தியம், கதா, கலாட்சேபம், கீர்த்தனை இவை மூலம் பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும். ப்ரபோதினி ஏகாதசியன்று அனைத்து வித புஷ்பம், அகர்பத்தி, தூபம் என்று பகவானின் ஆராதனையை மிகவும் விசேஷமாக செய்ய வேண்டும். சங்கு நீரால் பகவானுக்கு அர்க்யம் அளிக்க வேண்டும். தீர்த்த தான பலனை விட கோடி மடங்கு அதிக பலன் இதனால் கிட்டப்பெறும்.

எவர் ஒருவர் அகஸ்த்ய புஷ்பங்களால் பகவத் பூஜை செய்கிறாரோ, அவர் முன் இந்திரனும் கை கூப்பி வணங்குவான். எவர் ஒருவர்  , கார்த்திகை மாதத்தில் வில்வ பத்ரங்களால் (இலைகள்) பகவத் பூஜை செய்கிறாரோ, அவர் முடிவில் மோட்சப் பிராப்தி பெறுவர். துளசி தளத்தால் பகவத் பூஜை செய்வதால், ஆயிரம் ஜென்மங்களின் பாபம் நீங்குகிறது. இம்மாதத்தில், துளசி மஹாராணியை தரிசனம் செய்வது, நீர் அர்க்யம் அளித்து, நீரை தொட்டு வணங்குதல், த்யானம் செய்தல், கீர்த்தனை, துளசி செடியை நடுதல் (ரோபன்), சேவை செய்தல்,  இவை ஒருவருக்கு ஆயிரம் கோடி யுகங்கள் பகவானின் இருப்பிடத்தில் வசிக்கும் பேற்றினை அளிக்கும். இம்மாதத்தில் எவர் ஒருவர் துளசி செடியை நட்டு வளர்க்கிறோரோ, அவர் குடும்பத்தில் பிறப்பவர் அனைவரும் பிரளய காலத்தின் முடிவு வரை விஷ்ணுலோகத்தில் வசிக்கும் பேற்றினை பெறுவர்.

கதம்ப மலர்களால் பகவத் பூஜை செய்பவர், யமதர்மனின் ராஜ்ஜியமான நரகத்தின் வேதனையை அனுபவிக்க மாட்டார். அனைத்து மனோபீஷ்டங்களையும் பூர்த்தி செய்யும் பகவான் விஷ்ணு, கதம்ப மலர்களைக் கண்டதும் அத்யந்த ப்ரீதி அடைகிறார். அப்படி இருக்க அம்மலர்களைக் கொண்டு பூஜை செய்வதனால் கிட்டும் பலனை பற்றி சொல்லவும் வேண்டுமா?  ரோஜா மலர்களைக் கொண்டு பூஜை செய்பவர், பிறவிப்பேறான முக்தியை அடைவார். பகுல் மற்றும் அசோகா மலர்களைக் கொண்டு பகவத் பூஜை செய்பவர், வாழ்வின் இறுதி வரை சுக போகங்களுடன் வாழ்வர். வெள்ளை மற்றும் சிவப்பு கனேர் (அரளி போன்ற பூ வகை)  மலர்களைக் கொண்டு விஷ்ணு பூஜை செய்பவரின் பக்தியை கண்டு, விஷ்ணு மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். தூர்வா (அருகம்புல்) தளங்களைக் கொண்டு விஷ்ணு பூஜை செய்பவர், நூறு மடங்கு அதிகமாக பூஜையின் பலனை பெறுகிறார். சமீ பத்ரங்களால் (வன்னி இலைகள்) விஷ்ணு பூஜை செய்பவர், யமதர்மரின் பட்டினமான நரகத்திற்கான பயங்கரமான பாதையை மிகவும் எளிதாக கடந்து செல்வர். சம்பக மலர்களால் விஷ்ணு பூஜை செய்பவர், பிறப்பு, இறப்பு என்னும் ஜனன மரண சக்ரத்திலிருந்து விடுதலை பெறுகிறார்.

எவர் தங்கத்தால் செய்யப்பட்ட கேத்கி (தாழை) புஷ்பங்களால் பகவானை ஆராதிக்கிறாரோ, மாலையாக அணிவிக்கிறாரோ, அவரின் கோடி ஜென்மங்களின் பாபங்கள் நீங்குகிறது. எவர், மஞ்சள் மற்றும் ரக்த சிவப்பு நிற,  நறுமணம் மிக்க தாமரை மலர்களைக் கொண்டு பகவத் பூஜை செய்கிறாரோ, அவர் ஸ்வேத த்வீபத்தில் வசிக்கும் பேற்றினை பெறுகிறார்.

இவ்விதம் இரவில் பகவத் பூஜை முடிந்து அதிகாலையில் சுத்தமான நீர் நிரம்பிய நதியில் குளிக்க வேண்டும். ஸ்நானம் முடிந்தவுடன், பகவத் தியானத்துடன் வீடு திரும்பி பூஜை செய்ய வேண்டும். பிறகு பிராம்மண போஜனம் செய்வித்து, அவர்களுக்கு தக்ஷிணை அளித்து அருளாசியுடன் விடை கொடுத்து அனுப்ப வேண்டும். பிறகு குரு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன், பிராமணர்க்கு தக்ஷிணை அளித்து நியமத்துடன் விரதத்தை முடிக்க வேண்டும். 

விரதமன்று  இரவில் ஸ்நானம் செய்பவர், தயிர் மற்றும் தேன் தானம் செய்ய வேண்டும். பழங்களின் மீது விருப்பம் கொண்டவர், பழ தானம் செய்ய வேண்டும்.  எண்ணெய்க்கு பதிலாக நெய், நெய்க்கு பதிலாக பால் மற்றும் அரிசி இவற்றை தானம் கொடுக்க வேண்டும். விரத நாளில், நிலத்தில் உறங்குபவர், அனைத்தும் அடங்கிய படுக்கையை தானம் அளிக்க வேண்டும். எவர் மெளனத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் தங்கத்துடன் கூடிய எள் தானம் செய்ய வேண்டும். கார்த்திகை மாதத்தில் எவர் உபானஹ் தாரணம் செய்ய வில்லையோ, அவர் அவசியம் உபானஹ் தானம் செய்யவேண்டும். இம்மாதம் உப்பில்லாமல் உண்பவர், சர்க்கரையை தானம் செய்ய வேண்டும். எவர் நித்யம் தேவாலயங்களில் தீபம் ஏற்றுகிறாரோ, அவர், நெய் மற்றும் திரியுடன் கூடிய தங்கம் அல்லது தாமிரத்தால் ஆன விளக்கினை தானம் அளிக்க வேண்டும். 

சாதுர்மாஸ்ய காலத்தில் எதையாவது துறந்திருந்தால், அப்பொருளை இந்நாளன்று மீண்டும் ஏற்க வேண்டும். எவர் ஒருவர் ப்ரபோதினி ஏகாதசி விரதத்தை விதிபூர்வமாக கடைப்பிடிக்கிறாரோ, அவர் பன்மடங்கு சுகத்துடன் வாழ்ந்து இறுதியில் சுவர்க்க லோகத்தை அடைவர்.

எவர் ஒருவர் சாதுர்மாஸ்ய விரதத்தை எந்த வித பங்கமும் இன்றி பூர்த்தி செய்கிறோரோ, அவர் மறுபிறவி அடைய மாட்டார். எவரது விரதம் தடங்கல் பெறுகிறதோ, அவர் மீண்டும் விரத சங்கல்பத்துடன் ஆரம்பித்து பூர்த்தி செய்ய வேண்டும். எவர் ஒருவர் இவ் ஏகாதசி விரத மஹிமையை பாராயணம் அல்லது ஸ்ரவணம் செய்கிறாரோ, அவர் அஸ்வமேத யக்ஞம் செய்த பலனை அடைவர்.

பிரம்ம வைவர்த்த புராணம், கார்த்திகை மாதம்,  சுக்லபட்ச ஏகாதசி அதாவது  ப்ரபோதினி ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.

கதாசாரம்
தவம், துறவு, வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் புண்ணியத்தை அளிக்கக்கூடிய இதர ஆன்மீக நூல்களின் பாராயணம் இவற்றின் (ஸ்வாத்யாய்) நோக்கில் சாதுர்மாஸ்ய விரதம் மிகவும் மகத்துவம் பெறுகிறது. பகவான் விஷ்ணுவின் அருளை பெறுவதற்கு சாதுர்மாஸ்ய காலம் மிகவும் உன்னதமான காலமாகும். இல்லற தர்மம் கடைப்பிடிப்பவரும் சாதுர்மாஸ்ய காலத்தில் முடிந்தவரை பகவான் விஷ்ணுவை ஆராதித்து நற்பலனை அடையலாம்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம:

தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - அஜா - அன்னதா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,  ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment